இரண்டு தடவைகள் இடம்பெற்ற நேர்முகத்தோ்விலும் ஊழலா? – வடக்கு சுகாதார தொண்டர்கள் கேள்வி

வடக்கு மாகாணத்த்தல் உள்ள சுகாதார தொண்டர்களை நியமிப்பதில் கடந்தாண்டு இரண்டு தடவைகள் நேர்முகத்தேர்வு இடம்பெற்றும் நியமனம் வழங்கப்படவில்லை. எனவும் இரண்டு தடவைகள் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் ஊழல் இடம்பெற்றுள்ளதா எனவும் வடக்கு சுகாதார தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் நீண்ட காலம் தொண்டர்களாக பணியாற்றிய சுமார் 909 பேர்களுக்கும் கடந்த வருடம் மே மாதம் 27.28 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதன் போது 452 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நியமனம் காவகச்சேரியில் வைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, ஒருவர் தற்கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டார் இதனையடுத்து குறித்த நியமனங்கள் இரத்து செய்யப்பட்டது. இந்த நியமனங்களை இரத்துச் செய்து புதிதாக நேர்முகத் தேர்வினை நடாத்தி சரியானவர்களை தெரிவு செய்யுமாறு அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த வருடம் செம்ரெம்பர் 27,28.29 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. இதன்போது 386 பேர் நிரந்தர நியமனத்திற்கு தெரவு செய்யப்பட்டிருந்தனர். புள்ளி அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான நியமன கடிதங்களும் வடக்கு சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் தேர்தல் முடிய கடமைகளை பொறுப்பேற்குமாறு நியமனம் கடிதம் பெற்றவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் இதன் பின்னரும் நியமனம் கிடைக்காத ஏனைய சுகாதார தொண்டர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இதனால் இரண்டாவது நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் கடிதம் வழங்கியவர்கள் நியமனமும் இரத்துச் செய்யப்பட்டது. காரணம் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றதாக சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டு நேர்முகத் தேர்வுகளையும் ஆளுநரின் பணிப்புக்குமைய வடக்கு மாகாணத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த நிர்வாகத் தர உயரதிகாரிகளும், மருத்துதுறையில் அனுபவபெற்றவர்களும் நடாத்தியிருந்தனர். இந்த இந்த இரண்டு தடவைகளும் இவர்களால் நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் முறைகேடுகள், ஊழல்கள் என்றால் இவர்களை ஏன் தொடர்ந்தும் அந்தந்த உயர் பதவிகளில் வைத்திருக்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பும் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் நியமனம் பெற்ற சுகாதார தொண்டர்கள். 909 பேர் சுகாதார தொண்டர்கள் எனக் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதில் அரைவாசிபேருக்கு நியமனம் வழங்கும் போது நியமனம்கிடைக்காதவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது என்றும். எனவே இதனை காரணமாக வைத்து தங்களின் நியமனத்தை இழுத்தடிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here