2 பேருல யாருடா அவுட்?… அம்பயர்களையே தலைசுற்ற வைத்த இந்திய வீரர்கள் (VIDEO)

இளையோர் உலக கோப்பை இறுதி போட்டியில் மூன்றாவது நடுவரையே இந்திய வீரர்கள் திணறவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 177 ஓட்டங்களை பெற்றது. இதன்போது, இந்திய வீரர்கள் த்ருவ் ஜுரேல் மற்றும் அதர்வா ஆகிய இருவரும் ரன் அவுட்டில் முடிவெடுக்க முடியாத வகையில் டிவி அம்பயரையே குழம்ப வைத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

43வது ஓவரின் 2வது பந்தை த்ருவ் ஜுரேல் எதிர்கொண்டார். அதை ஓஃப் திசையில் தட்டிவிட்டு ஜுரேல் ரன் ஓடினார். ஆனால் அதற்கு ரன் ஓடுவதற்கு தயங்கிக்கொண்டே ஓட தொடங்கிய அதர்வா, ஃபீல்டர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசியதை கண்டதும் பின்வாங்கினார். எனவே அதர்வா மீண்டும் பந்துவீச்சு முனையை நோக்கி ஓடினார். ஆனால் சற்றும் பின்வாங்காத ஜுரேலும் பந்துவீச்சு முனைக்கு ஓடினார்.

இதையடுத்து இருவருமே மிகத்துல்லியமாக ஒரே நேரத்தில் பந்துவீச்சு முனையை அடைந்தனர். இதற்கிடையே விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட முனையில் ரன் அவுட் செய்தார். இதை ரிவியூ செய்த டிவி அம்பயர், இதில் யாருக்கு அவுட் கொடுப்பது என்று தெரியாமல் நீண்ட நேரம் ஆய்வு செய்தார். இருவரில் ஒருவர், மற்றொருவரை விட முன்பாக க்ரீஸை அடைந்திருந்தால், அவர் நொட் அவுட்டாக இருந்திருப்பார். மற்றவருக்கு அவுட் கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த சம்பவத்தில் இருவருமே ஒரே நேரத்தில் க்ரீஸை அடைந்ததால், யாருக்கு அவுட் கொடுப்பது என்பதில் குழப்பமடைந்த டிவி அம்பயர், ஒருவழியாக இறுதியில் ஜுரேலுக்கு அவுட் கொடுத்தார்.

ஏனெனில், அந்த பந்தை எதிர்கொண்டது ஜுரேல் தான். பந்துவீச்சு முனையில் இருந்த அதர்வா மீண்டும் அவரது க்ரீஸுக்கு திரும்பினார். எனவே துடுப்பாட்ட முனையில் இருந்த ஜுரேல் தான் அவரது க்ரீஸில் இல்லை என்பதால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here