‘என்னவிலை அழகே’: நாயகிக்கு புற்றுநோய்!

காதலர் தினம் படத்தில் என்ன விலை அழகே.. என்ற பாடலுக்கு மிடுக்காக அங்கும் இங்கும் நடந்து சென்றும் நடனமாடியும் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்திருப்பார் நடிகை சோனாலி பிந்த்ரே. ஆனால், அவரை புற்றுநோய் தாக்கியிருக்கிறது.

இது குறித்து சோனாலி பிந்த்ரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘வாழ்க்கை சில நேரங்களில் நீங்கள் சிறிதும் எதிர்பாராத விஷயத்தை செய்துவிடும். அப்படித்தான் அண்மையில் எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உடலில் ஏற்பட்ட திடீர் வலிகளைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்றேன்.

அங்கு நடந்த சோதனைகள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தது. ஆனால், எனது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனக்கு துணயாக இருக்கும் அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

புற்றுநோயை சமாளிக்க துரிதமாக நடவடிக்கை எடுப்பதைவிட வேறு எந்த வழியும் இல்லை. மருத்துவர்களும் அதையே சொன்னார்கள். அதனால், நியூயார்க்கில் சிகிச்சை பெற்றுவருகிறேன். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கேன்சரை எதிர்த்துப் போராடுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த வேளையில் என்னை ஆதரித்து குவியும் அன்பு என்னை பலப்படுத்துகிறது. அதற்கு நான் கடன்பட்டுள்ளேன். இந்தப் போரை எதிர்கொள்ள தயார். குடும்பமும் நண்பர்களும்தான் எனது பலம்’ எனக் கூறியிருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here