வர்மாவில் விக்ரம் மகனுக்கு ஜோடி இவர்தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாலா தற்போது தெலுங்குவில் வெளியாகி மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக கவுதமியின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பின்னர், அது வதந்தி என தெரிய வந்தது. அதன் பின்னர் சமீபத்தில் சூர்யா யோதிகாவின் மகளாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்த பெண் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் தற்போது இதுவும் வதந்தி தான் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் பெங்காலியை சேர்ந்த மேஹா என்ற இளம் நடிகை ஒருவர் கமிட்டாகி இருப்பது உறுதியாகியுள்ளது.

varma

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here