இந்த வார ராசிபலன்கள் (9.2.2020- 15.2.2020)


பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். இஷ்டதெய்வ அருள் பலம் துணை நிற்கும். முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். உறவினர் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். எதிர்ப்பாளரால் உருவான தொல்லை விலகும். மனைவி இணக்கமுடன் நடந்து கொள்வார். சுற்றுலா பயணங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் நலன் சிறக்க பாடுபடுவர். மாணவர்களுக்கு பாராட்டு, பரிசு கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

புதன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். செயல்களில் கூடுதல் நேர்த்தி உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு வேண்டும். பிள்ளைகள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு படிப்பு, வேலையில் முன்னேறுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் நற்செயல்களை முழுமனதுடன் பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு சீரான அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு நன்மை தரும்.

குரு, சந்திரன் நற்பலன் தருவர். அனுகூல நிகழ்வுகள் மனதில் ஊக்கம் தரும். செலவில் சிக்கனத்தை மேற்கொள்வீர்கள். தம்பி, தங்கையர் சொந்த பணிகளில் கவனம் கொள்வர்.

வாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் உங்களின் வழிகாட்டுதலை தயக்கமுடன் ஏற்றுக்கொள்வர். பூர்வீகச் சொத்தில் வருமானம் வர வாய்ப்புண்டு. பகைவரிடம் சமயோசிதமாக விலகுவது நல்லது. மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் குறித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டு. பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். பெண்கள் தாய் வீட்டாரின் உதவியைக் கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கேது, சனீஸ்வரர், புதன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை சேரும். உற்சாக மனதுடன் செயல்பட்டு நண்பர், உறவினரின் பாராட்டை பெறுவீர். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

வெளியூர் பயணங்கள் இனிய அனுபவம் தரும். பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல்கள் நிறைவேற உதவுவீர்கள். எதிரியால் உருவான தொந்தரவு மறையும். நோய், தொந்தரவு குறையும். மனைவி வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபரா வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு பணவரவில் முன்னேற்றம் உண்டு. பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.
பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

சூரியன், குரு, சுக்கிரன், ராகு, சந்திரன் ஆதாய பலன் தருவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சமூக நலப்பணியில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையான செயல்களை செய்வீர்கள். பூர்வ சொத்தை பராமரிக்க கூடுதல் பணம் செலவாகும். அறிவுப்பூர்வ செயலால் பகைவரையும் வியக்கச் செய்வீர்கள். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். இன்பச் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி காண்பர்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

புதன், சந்திரனால் நன்மை உண்டாகும். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வெளியூர் பயணத்தால் ஓரளவு நன்மை உண்டு. பிள்ளைகள் உங்களின் சொல் கேட்டு நடந்து கொள்வர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். மனைவியின் எதிர்பார்ப்பை தாமதமாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். தொழில் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்களின் பொறுப்பான பணிக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: வீரபத்திரர் வழிபாடு நன்மை தரும்.

சனீஸ்வரர், செவ்வாய், கேது சந்திரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். புத்தி சாதுரியத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் நற்செயலை நண்பர்கள் வாழ்த்துவர்.

குடும்பத்திற்கான தேவையனைத்தும் நிறைவேறும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். பிள்ளைகள் பெற்றோர் சொல்லை வேதமென ஏற்றுக் கொள்வர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான வளர்ச்சி உண்டாகும். பணியாளர்கள் நேர்த்தியாக பணிபுரிவது அவசியம். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவி செய்வர். மாணவர்கள் படிப்பில் புதிய அணுகுமுறையை பின்பற்றுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு நல்வாழ்வு தரும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்ட பலன் தருவர். மனதில் குழப்பம் விலகும். பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

பிள்ளைகள் விவேகமுடன் செயல்பட்டு வருவர். எதிரிகள் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் உருவாகும் இடையூறு சுவடு தெரியாமல் விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் கணவருடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறப்பதோடு நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு தொழில் வளர்ச்சி தரும்.

சந்திரன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடப்பீர்கள்.

சத்தான உணவு, சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவதால் மன அமைதியை பெறலாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு கூடுதல் வளர்ச்சி தரும். பணியாளர்கள் பணியிடச் சூழல் உணர்ந்து பணிபுரிந்தால் நல்லது. பெண்கள் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் வீண் பேச்சை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் : 7.2.2020 மாலை 5:04 – 8.2.2020 நாள் முழுவதும்.
பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை அளிக்கும்.

புதன், ராகு, சுக்கிரன், சந்திரனால் தாராள நற்பலன் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். பணிகளை முன்யோசனையுடன் செயல்படுத்துவது நல்லது.

வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல்களை ஒழுங்குபடுத்துவீர்கள். நண்பருடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். வழக்கு, விவகாரத்தில் தீர்வு கிடைக்க தாமதமாகலாம். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் நற்செயல்கள் பெருமை தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றுவர். பெண்கள் ஆடம்பர செலவைத் தவிர்ப்பர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம்: 9.2.2020 இரவு 8:53 மணி – 11.2.2020 இரவு 11:42 மணி
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

குரு, சனீஸ்வரர், கேது, சுக்கிரனால் தாராள நன்மை கிடைக்கும். புதிய யுக்தியுடன் செயல்பட்டு பணிகளை எளிதாக முடிப்பீர்கள். சமூக நிகழ்வு மனதில் நல்ல மாற்றத்தை தரும்.

தாயின் அன்பு, பாசம் கிடைக்கும். வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் மனக்குறையை சரி செய்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல் குடும்ப நலனுக்கு பெரிதும் உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து செயல்படுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வை பெறுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமுடன் பயில்வர்.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

சூரியன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

சத்தான உணவு உண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பீர்கள். பகையாளியிடம் விலகுவதால் மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பினால் பொருளாதாரம் அதிகரிக்கும். பணியாளர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் நகை கடன் கொடுக்க, வாங்க வேண்டாம். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் புதிய முயற்சியால் படிப்பில் வெற்றி காண்பர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here