காரைநகருக்கான தொலைபேசி இணைப்பு தூண்கள் முறிந்துவிழும் அபாயத்தில்!

காரைநகரிற்கு தொலைபேசி இணைப்பை வழங்குவதற்காக கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள தூண்கள் உடையும் நிலையில் உள்ளன. எனினும், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள் தூண்களை நிறுவி காரைநகருக்கு தொலைப்பேசி சேவையை வழங்கி வருகிறது. கடலுக்குள் நிறுவிய ஸ்ரீலங்கா ரொலிகொம் தூண்கள் கீழ் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. தூண்களுக்குள் இருக்கும் இரும்புக்கம்பிகள் கடல் நீர் ஊறி துருப்பிடித்து தூண்கள் வெடித்துள்ளன.

வீதிக்கு மிக அருகிலே காணப்படும் தூண்கள் வெடித்துள்ளதால், பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயம் உள்ளது. வீதியில் போகும் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக இரண்டு மாதங்களு முன் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா ரொலிகொம் முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here