பாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்!

பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காமல், அவர்களையும் சக மனிதர்களாக பார்க்கவும், ஆண் -பெண் சமத்துவத்தை புரிய வைக்கவும், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடசாலை அதிபர் ஒருவர்.

இடதுசாரிய சிந்தனையுள்ள கருணாகரன் என்ற அதிபரே இந்த வித்தியாசமான- முன்னுதாரண முயற்சியில் இறங்கியுள்ளார். நாவலப்பிட்டிய கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் இந்த முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.

அந்த பகுதியில் அவரது முற்போக்கான நடவடிக்கைகளால் அவரை பெரிதும் மக்கள் மதிப்பதும் குறிப்பிடத்தக்கது.

யட்டியாந்தோட்ட கருணாகரன் என்ற பெயரில் இலக்கியம், சமூகம், அரசியல் என பல துறைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார். கந்தலோயா விடியல் குழு என்ற பெயரில் அங்கு நாடக குழுவொன்று அமைக்கப்பட்டு, நாட்டார் இயல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், அவரது நடவடிக்கைக்கு அடிப்படைவாத சிந்தனையுள்ள சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அவரது நடவடிக்கைகளால் உள்ளூரில் நிறைய விழிப்பணர்வு ஏற்பட்டு வருவதாக மக்கள் கூறுகிறார்கள்.

 

அந்த ஆசிரியரின் முகப்புத்தக பதிவை கீழே தருகிறோம்

ஆண், பெண் மாணவர்கள் கட்டிப்பிடித்து இருப்பதும், உருண்டு புரள்வதும் தப்பான விடயமா?

பெற்றோர்கள் இதற்கு அனுமதிப்பார்கள்?

பொதுவாக பெண்கள் பற்றிய பையன்களின் கருத்து என்ன?

பெண்கள் என்பது வெறுமனமே பாலியல் பண்டமா?

பெண்களின் அங்கங்கள் பாலியல் சார்ந்தனவையா?

தமிழ் சமூகமும், தமிழ் சினிமாவும் இதைப்பற்றி என்ன சொல்கிறது?

இந்த பழமைவாத சிந்தனைகளை
எப்படி உடைத்தெரிவது?

எங்கே தொடங்குவது?

கந்தலோயா பாடசாலை இதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கிறது.

அதிபர் என்ற ரீதியில் ஆகக் குறைந்தது
04 பேரிடம் (பெற்றோரிடம்) அடி வாங்கியிருக்கின்றேன்.

தொடர் தலைமைத்துவ பயிற்சியில்
இவ்வாறான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

மட்டக்களப்பு சீலன் சேர், வ,க.செ,மீராபாரதி அவர்களின் பங்களிப்பும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அளப்பரியது.

2012 தொடங்கப்பட்ட இந்தப்பயணத்தின் வலி கொடியது.

அனைத்து மாணவர்முன்னும்
ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும்
அடி வாங்கிய
அனுபவம் யாரிடமாவது உண்டா?

“சரிநிகர் சரிசமனாய் வாழ்வோமிந்த நாட்டினிலே ”
இது
இன சமத்துவத்துக்கு மட்டுமல்ல,
ஆண், பெண் சமத்துவத்துக்கும் என்று நினைப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here