விஜயகலாவின் உரைக்கு கைதட்டிய உத்தியோகத்தர்களிடமும் விசாரணை: அரசஅதிபர் அதிரடி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அது தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி சகல பிரதேச செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை யாழ்.மாவட்ட செயலர் வழங்கியுள்ளார்.

ஐனாதிபதியின் மக்கள் சேவை 8ஆவது தேசிய நிகழ்சி திட்டம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெருமளவான அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஷ்வரன் உரையாற்றும்போதும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்கவேண்டும் என்று உரையாற்றும் போதும் அரச உத்தியோகத்தர்கள் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தனர்.

இந்த நிலையில் உத்தியோகத்தர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் ஒன்று மாவட்டச் செயலர் என். வேதநாயகனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடித்ததில், “உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் தங்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டமை அவதானிக்கப்பட்டு ள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி” அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் , அன்றைய தினம் நிகழ்வில் கலந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here