இலங்கையின் மண்புழு உரம் தயாரிக்கும் முதலாவது திட்டம்!


கழிவு மறுசுழற்சி திட்டங்களின்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி கரிம உரங்களை உற்பத்தி செய்யப்படுகின்றது. எனினும், விவசாயிகளின் நண்பனான மண்புழுவின் உதவியுடன் கரிம உரம் தயாரிக்கப்படும் இலங்கையின் முதலாவது திட்டம் மாத்தறையில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

மாத்தறையின் கடவில பகுதியிலுள்ள முன்னணி ஹோட்டல் வளாகத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பண்ணை மேலாளர் உதேஷ் தர்மசிறி, ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாபலான வேளாண்மை பீடத்தின் உதவியுடன் 2018ம் ஆண்டில் இந்த மண்புழு பண்ணையை (WORM FARM) ஆரம்பித்தார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள CENTRAL COMPOST உடன் இணைந்து தன்னுடைய அறிவை மேம்படுத்திய உதேஷ் தர்மசிறி, இலங்கைக்கு ஆலோசனை சேவையாக இந்த திட்டத்தை முன்னெடுக்க முன்வந்தார்.

கரிம உரங்களை உற்பத்தி செய்வதன் முக்கிய நன்மை என்னவென்றால், ஈக்கள், எலிகள் அல்லது பிற விலங்குகளின் வாசனையுமின்றி, எந்த வாசனையுமின்றி கரிம உரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உற்பத்தி செய்யலாம்.

சிறிய உற்பத்தி ஆலையில் 10 சிறிய பெட்டிகள் உள்ளன. அவை கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்கான நடுத்தர அளவிலான அறைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு அறையும் 180 லிட்டர் கொள்ளளவுடையது.

மண்புழுக்களின் உதவியுடன் தயாரிக்கப்படும் கரிம உரங்கள் மற்றும் திரவ உரங்கள் விஷம் இல்லாததுடன், செலவு இல்லாமல் உற்பத்தி செய்வதற்கான சிறந்த தீர்வாகும்.

வேளாண் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் அழிந்துபோகும் மண்ணின் இயற்கையான கனிமங்களை மீட்டெடுப்பதன் மூலம், விவசாய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை இந்த இயற்கை உரம் வழங்கும்.

இதேவேளை, அண்மையில் யாழில் சிறியளவில் இந்த முயற்சி சில தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here