இந்தவார ராசிபலன்கள் (2.2.2020 – 8.2.2020)

பெரும்பான்மை கிரகங்களால் அளப்பரிய நற்பலன் கிடைக்கும். கருணை நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். வாழ்வியல் நடைமுறை சிறப்பாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனத்தில் சில நல்ல மாற்றத்தை செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பிள்ளைகளுக்கு நல்வழி காட்டி மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள். மனைவியின் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பம் அறிந்து சிறப்பாக பணிபுரிவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். செயல்களில் கூடுதல் நேர்த்தி உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு வேண்டும். பிள்ளைகள் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு படிப்பு, வேலையில் முன்னேறுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் நற்செயல்களை முழுமனதுடன் பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு சீரான அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு நன்மை தரும்.

செவ்வாய், குரு, சந்திரனால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பேச்சில் ஆன்மிக கருத்து வெளிப்படும். உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சிகளை பகிர்வீர்கள்.

வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றவும். பிள்ளைகளின் வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபடுவீர்கள். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி அபரிமிதமான வளர்ச்சி காணப்படும். பணியாளர்கள் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் குடும்பத்தினரின் அன்பை பெறுவர். மாணவர்கள் படிப்பில் புதிய இலக்கை எட்டுவர்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கேது, சனீஸ்வரர், புதன், சுக்கிரனால் அளப்பரிய நன்மை சேரும். உற்சாக மனதுடன் செயல்பட்டு நண்பர், உறவினரின் பாராட்டை பெறுவீர். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

வெளியூர் பயணங்கள் இனிய அனுபவம் தரும். பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல்கள் நிறைவேற உதவுவீர்கள். எதிரியால் உருவான தொந்தரவு மறையும். நோய், தொந்தரவு குறையும். மனைவி வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபரா வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு பணவரவில் முன்னேற்றம் உண்டு. பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.
பரிகாரம் : லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

சூரியன், குரு, சுக்கிரன், ராகு, சந்திரன் ஆதாய பலன் தருவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சமூக நலப்பணியில் ஈடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையான செயல்களை செய்வீர்கள். பூர்வ சொத்தை பராமரிக்க கூடுதல் பணம் செலவாகும். அறிவுப்பூர்வ செயலால் பகைவரையும் வியக்கச் செய்வீர்கள். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். இன்பச் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக தேர்ச்சி காண்பர்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

செவ்வாய், புதன், சந்திரன் கூடுதல் நற்பலன் தருவர். செயல்களில் நிதானம் காணப்படும். குடும்பத் தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் அறிமுகமில்லாதவருக்கு இடம் தர வேண்டாம்.

பிள்ளைகளின் செயல்களை மேம்படுத்துவது நல்லது. பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பை பின்பற்றவும். மனைவியின் ஆர்வம் மிகுந்த செயலில் சிறு குளறுபடி ஏற்படலாம். அரசாங்க உதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம். கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பொறுப்புடன் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.

சந்திராஷ்டமம் : 2.2.2020 காலை 6:00 – நள்ளிரவு 3:10 மணி
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

கேது, சனீஸ்வரர், சந்திரனால் நன்மை ஏற்படும். சமூக நிகழ்வு மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகலாம்.

வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் குழப்பமான சிந்தனையை போக்க உரிய ஆலோசனையை வழங்குவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பரச் செலவை தவிர்க்கவும். மனைவி குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவை. பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் கணவரின் எண்ணங்கள் நிறைவேற உதவுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம் : 2.2.2020 நள்ளிரவு 3:11 – 5.2.2020 காலை 11:20 மணி
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

குரு, சுக்கிரன், சூரியன், புதன் ராஜயோக பலன் தருவர். மனதில் தெளிவு பிறக்கும். பேச்சு, செயலில் வசீகரம் வெளிப்படும். உங்களின் செயல்கள் நண்பர்களால் பாராட்டை பெறும்.

உடன்பிறந்தவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வீர்கள். குடும்பத்திற்கான செலவில் தாராளம் இருக்கும். பிள்ளைகள் பெற்றோரின் சொல்கேட்டு நடப்பர். உடல் நலனில் அக்கறை தேவை. மனைவியுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து பணசேமிப்பு கூடும். பணியாளர்கள் சூழல் உணர்ந்து சிறப்பாக பணிபுரிவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நண்பர் உதவியால் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம் : 5.2.2020 காலை 11:21 – 7.2.2020 மாலை 5:03 மணி
பரிகாரம் : அம்பிகை வழிபாடு வெற்றி தரும்.

சந்திரன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடப்பீர்கள்.

சத்தான உணவு, சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவதால் மன அமைதியை பெறலாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு கூடுதல் வளர்ச்சி தரும். பணியாளர்கள் பணியிடச் சூழல் உணர்ந்து பணிபுரிந்தால் நல்லது. பெண்கள் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் வீண் பேச்சை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் : 7.2.2020 மாலை 5:04 – 8.2.2020 நாள் முழுவதும்.
பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை அளிக்கும்.

செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். உடன்பிறந்தவரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம்.

வெளியூர் பயணம் இனிய அனுபவத்தை தரும். பிள்ளைகளின் செயலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வழக்கு, விவகாரத்தில் சமரசத் தீர்வை எளிதாக பெறலாம். நிலுவைத் தொகை இதமான அணுகுமுறையால் வசூலாகும். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றி பாராட்டு பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத் திறன் வளரும்.

பரிகாரம் : காளி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

குரு, சனீஸ்வரர், கேது, சுக்கிரனால் தாராள நன்மை கிடைக்கும். புதிய யுக்தியுடன் செயல்பட்டு பணிகளை எளிதாக முடிப்பீர்கள். சமூக நிகழ்வு மனதில் நல்ல மாற்றத்தை தரும்.

தாயின் அன்பு, பாசம் கிடைக்கும். வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் மனக்குறையை சரி செய்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல் குடும்ப நலனுக்கு பெரிதும் உதவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து செயல்படுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வை பெறுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமுடன் பயில்வர்.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

சூரியன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

சத்தான உணவு உண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பீர்கள். பகையாளியிடம் விலகுவதால் மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பினால் பொருளாதாரம் அதிகரிக்கும். பணியாளர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் நகை கடன் கொடுக்க, வாங்க வேண்டாம். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் புதிய முயற்சியால் படிப்பில் வெற்றி காண்பர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here