கமல் எனக்கு எதிரியா?- ரஜினியின் வித்தியாசமான பதில்

0

கமல்ஹாசன் உங்களை எதிர்ப்பேன் என்கிறாரே என்கிற கேள்விக்கு நான் அவரை எதிர்க்கமாட்டேன் என்று பதிலளித்த ரஜினி எதிரி பற்றி விளக்கம் அளித்தார்.

திரையுலகில் நெருங்கிய நண்பர்களாக இருந்த ரஜினியும் கமலும் அரசியல் களத்தில் குதித்த பின்னர் அதே ஒற்றுமையுடன் இருக்கிறார்களா? என்பது குறித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தெரிய வருகின்றன. சமீபத்தில் ரஜினி ஆன்மிக அரசியலுடன் வந்தால் எதிர்ப்பேன் என்று கமல் பேசியிருந்தார்.

இதுகுறித்து இன்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினி சாமர்த்தியமாக பதிலளித்தார்.

ஆன்மிக அரசியல் வந்தால் எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறுகிறாரே?  என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த ரஜினி, ”நான் எதிர்க்கமாட்டேன், எனக்கு கமல் எதிரியல்ல. எனது எதிரி ஏழ்மை, லஞ்சம், வேலையின்மை, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான். கமல் என்னுடைய எதிரி இல்லை.

நிறைய பேசினால் நிறைய எதிரிகள் தான் வருவார்கள். பேசிப்பேசியே நிறைய அரசியல் செய்துவிட்டார்கள். ஆகவே அது வேண்டாம்” என்றார்.

அதன்பின்னர் தனது வீட்டிலிருந்து மவுனப் போராட்டம் நடக்கும் வள்ளுவர்கோட்டம் பகுதிக்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு அமர்ந்திருந்த கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து அன்பாகப் பேசினார். அதன் பிறகு அருகருகே அமர்ந்திருந்தும் இருவரும் அவ்வளவாக பேசவில்லை. ரஜினி இறுகிய முகத்துடனே அமர்ந்திருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here