என்னை கொல்ல முயன்றவர்கள் தப்பிக்க முடியாது: சுமந்திரன்!

தன்னை கொல்ல முயன்றவர்களை மன்னிக்கும்படி ஒரு போதும் கேட்கப் போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

என்னை கொல்ல முயன்றவர்கள் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம்தான் அவர்கள் தொடர்பாக முடிவெடுக்க முடியும்.

சட்டம் நீதித்துறை ஒழுங்காக இயங்க வேண்டும். எவரும் எவரையும் கொல்ல முயன்றுவிட்டு, அது அரசியல் படுகொலை, அவரை விசாரிக்காமலேயே மன்னிப்பளிக்க வேண்டுமென எவரும் நினைக்க கூடாது. போர்க்காலத்தில் நடந்தது வேறு. இப்பொழுது நடப்பது வேறு.

அரசியல் படுகொலை செய்ய முன்வந்தால், சட்டம் அவர்களிற்கு எதிராக செயற்பட வேண்டும். வெளிநாட்டில் இருந்து யாராவது இதற்கு முயன்றால் நிச்சயம் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றார்.

என்னை கொல்ல முயன்ற இங்குள்ளவர்களை மன்னிக்கும்படி, வழக்கு விசாரணை முடிந்த பின் நான் கேட்பேன். ஆனால், வெளிநாட்டிலிருந்து என்னை கொல்ல திட்டமிட்டவர்களை மன்னிக்க மாட்டேன் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here