கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவஞ்சலி!

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 33வது ஆண்டு நினைவஞ்சலி இன்று (28) இடம்பெற்றது.

மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி இடம்பெறுவது வழக்கம்.

1987ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை இராணுவத்தினரால், முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணையில் வேலைசெய்த முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இன்றைய அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி உறுப்பினர்கள், ஐனநாயக போராளிகள் கட்சி உபதலைவர் நகுலேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபி முன்பாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here