சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக இவர்கள் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here