எஸ்.ஜே.சூர்யாவுடன் காதல் செய்தி… காதலரை அறிமுகப்படுத்தினார் பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நாயகியாக கலக்கி வருபவர் ப்ரியா பவானி சங்கர். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு ஏராளமான ரசிகளை சம்பாதித்து வைத்திருந்தார்.

சமீபத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக செய்திகள் பரவின. அந்த செய்திகளை எஸ்.ஜே.சூர்யா மறுத்திருந்தார்.

இந்த விஷயம் சீரியஸாக உருவெடுக்க தற்போது ப்ரியா பவானி சங்கர் முதல் முதலாக தனது காதலரை உலகிற்கு அறிமுகப் படுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக பிரியா பவானி சங்கர் காதலிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் யாரை என்பது தான் இவ்வளவு நாள் புதிராக இருந்தது.

இடையில் பிக் பாஸ் கவின், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதலித்தார்கள் எனவும் செய்திகள் பரப்பப்பட்டன.

தன்னுடைய இமேஜுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக தற்போது தன் காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here