வலையில் சிக்குவாரா விந்தன்?

யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ்ப்பாண கிளையில் ஏற்பட்டுள்ள பிடுங்குப்பாடு, ரெலோவின் யாழ் மாவட்ட அணிக்குள் இன்னொரு பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ரெலோ சார்பில் யாழில், அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் களமிறக்கப்படுவாரென, கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முடிவு செய்திருந்தார்.

அண்மையில் யாழ் மாவட்ட கிளைக்கூட்டத்தை கூட்டி தனது முடிவை அவர் தெரிவித்தபோது, அங்கு சர்ச்சை உருவானது. கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தரான விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட பலர் இதை எதிர்த்தனர். யாழ்ப்பாணத்திற்கு கூட்டமைப்பு சார்பில் ஒதுக்கப்பட்ட ஒரேயொரு ஆசனத்தை பொருத்தமானவருக்கு கொடுத்து, ஆசனத்தை வெற்றிபெற முயற்சிக்க வேண்டும், வெற்றி வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பை யாழ் கிளையிடம் விடுங்கள் என அவர்கள் வலியுறுத்தினர்.

எனினும், யாழில் ரெலோ வெற்றிபெறாது, சம்பிரதாயமாகவே சுரேனை நியமிக்கிறோம் என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தின் பின், கட்சியின் முக்கியஸ்தரான விந்தன் கனகரட்ணம் அதிருப்தியில் இருப்பார் என கருதியோ என்னவோ அவரை தமது பக்கம் இழுத்தெடுக்கும் முயற்சியில் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பிலுள்ள சிலர் முயற்சிக்கிறார்கள். அது பற்றி விந்தனுடன் தொலைபேசியிலும், நேரிலும் தொடர்ந்து பேசி வருவதாக தெரிகிறது.

ஒருவேளை, விந்தனும் ரெலோவை விட்டு வெளியேறினால், ரெலோவின் யாழ் மாவட்ட கிளை பெரும் வீழ்ச்சியை சந்திக்குமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here