கணவன் இறந்த செய்தியை கேட்டதும் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி: மரணத்திலும் இணைபிரியாத யாழ் ஜோடி!

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி (72) என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கொல்லங்கலட்டி சேர்ந்த குறித்த குடும்பத்தில் குடும்பத் தலைவரான ஐயாத்துரை என்பவர் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்

அவரது மனைவியான ஐயாத்துரை சரஸ்வதி என்பவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தனது கணவன் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த குடும்ப பெண் மயக்கம் அடைந்துள்ளார்

மயக்கமடைந்து விழுந்த குறித்த குடும்பப் பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here