இலங்கையையும் அச்சுறுத்தும் கொரோனா: மேலும் இருவர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கிய சந்தேகத்தில் இதுவரை இலங்கையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஆண் ஒருவரும் சீன நாட்டு பெண் ஒருவருமே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி நான்கு பெண்களும், ஆணொருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக தெரிவித்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்று (25) அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு கொரோனா வைரஸ் தொற்றுத்தானா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த இரு பெண்களினதும் இரத்த மாதிரிகளை இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவில் கல்வி கற்ற நிலையில் இலங்கை திரும்பிய வைத்திய பீட மாணவி கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் சுற்றுலா பயணியான சீன பெண்ணும் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டார்.

இவர்களுக்காக விசேட சிகிச்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களுக்கு கொரன்னா வைரஸ் தாக்கி உள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here