கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா அடையாளம் காணப்பட்டது!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

பல நாடுகளிற்குள்ளும் மெதுமெதுவாக எட்டிப்பார்க்கும் கொரோனா, தற்போது, ஒன்ராறியோ மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மையில் சீனாவிற்கு சென்று வந்த ஒருவரே நோய்த் தாக்கத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“வியாழக்கிழமை மாலை (23) ஒரு வயது வந்த ஆண் காய்ச்சல் மற்றும் சுவாச அறிகுறிகளுடன் சன்னிபிரூக் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்“  என்று சன்னிபிரூக் சுகாதார அறிவியல் மையம் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சன்னிபிரூக்கின் அவசர சிகிச்சைக் குழு நோயாளியை உடனடியாக தனிமைப்படுத்தி, ஊழியர்கள் மற்றும் பிற நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. நோயறிதல் சோதனை நடத்தப்பட்டது மற்றும் நோயறிதலை உறுதிப்படுத்த மாதிரிகள் ஒன்ராறியோவில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.” என மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளி தற்போது நிலையான நிலையில் உள்ளார்.

இந்த வழக்கின் பிரதிபலிப்பாக, ஒன்ராறியோ அரசாங்கம் தனது இணையதளத்தில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களுக்காக ஒரு புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதில் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பல விடயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here