சாந்தையில் சிறப்பாக நடைபெற்ற கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டி!

சாந்தை ஶ்ரீ சிவசுப்பிரமணியம் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு
வெண்கரம் அமைப்பின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சாந்தை ஶ்ரீ சிவசுப்பிரமணியம் ஆலய தர்மகர்த்தா செ.தனுசன் தலைமையில் பண்டத்தரிப்பு சாந்தை சவாரித்திடலில் பிற்பகல் 4.00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டியானது அ, ஆ, இ ஆகிய மூன்று பிரிவுகளில் நடாத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் சிறப்பு பங்கேற்பாளர்களாக வெண்கரம் அமைப்பின் செயற்பாட்டாளர்களான மு.கோமகன், பி.பொன்ராசா, இரா.மயூதரன், மற்றும் வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் தலைமை செயற்பாட்டாளர் A.S.சந்திரன், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.தர்மகுலசிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன் ஊர்மக்கள் பலர் கலந்துகொண்டு பார்வையிட்டிருந்தனர்.

‘அ’ பிரிவு வில் முதலாமிடம் – சிந்துயன், இரண்டாமிடம் – சுவிஸ்திகா, மூன்றாமிடம் – வசந்தன் ஆகியோரும், ‘ஆ’ பிரிவில் முதலாமிடம் – சுவிந், இரண்டாமிடம் – சிந்துஜன், மூன்றாமிடம் – வசந்தன் ஆகியோரும், ‘இ’ பிரிவில் முதலாமிடம் -தினிஸ்ரன், இரண்டாமிடம் – வசந்தன், மூன்றாமிடம் – கனிஸ்ரன், நான்காமிடம் – அனிதராஜ் ஆகியோரும் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பரிசில்கள் ஆலய திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here