மைத்திரியின் ஆட்சியில் பொலன்னறுவை அபிவிருத்திக்கு 25.29 பில்லியன் செலவிடப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளிற்காக 25.293 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியுதவியுடனான திட்டங்கள் தவிர்த்து, பல்வேறு அரச நிறுவனங்கள் மற்றும் நேரடி அரசாங்க செலவினமாக இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2015 ஜனவரி 8ம் திகதி முதல் 2019 நவம்பர் 16ம் திகதி வரை இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவல்களின்படி, 2015 ஜனவரியில் முன்னாள் ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து ஐந்தாண்டு கால லவேலைத்திட்டமான ‘பிபிதெமு பொலன்னருவ’ அபிவிருத்தித் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டது.

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, அபிவிருத்தி திட்டத்தின் முழு அமலாக்க செயல்முறையையும் அவ்வப்போது கூட்டங்களை நடத்துவதன் மூலமும், தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கைகளை நடத்துவதன் மூலமும் தற்போதைய திட்டங்களின் நிலை குறித்து மேற்பார்வையிட்டார். இது 2015 முதல் 2019 வரை ஜனாதிபதி செயலகத்தின் செயல்திறன் அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டில், 152 திட்டங்களுக்கு 4 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. பாடசாலை அபிவிருத்திப் பணிகள், பாடசாலைகளுக்கான சுகாதார வசதிகள், விகாரைகள் மற்றும் மருத்துவமனைகளின் வளர்ச்சி மற்றும் வனவிலங்குகள், காடுகள் மற்றும் வீதிப் பாதுகாப்பு என பல்வேறு திட்டங்களிற்காக நிதி பயன்படுத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட 908 திட்டங்களில், 618 பணிகள் நிறைவடைந்தன. 5.63 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2017 இல் 2,338 அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் 1,781 திட்டங்கள்  முழுமையாக செயல்படுத்தப்பட்டன.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிதியில்,  15.663 பில்லியன் ரூபாவிலான 6,765 திட்டங்களை அமைச்சகங்கள், மாகாண சபை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் மூலம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் மேற்கொள்ள செலவிடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவின் உத்தியோகபூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற வருகைகளுக்காக அவரது ஐந்தாண்டு காலப்பகுதியில் செலவிடப்பட்ட நிதி விவரங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கிடைக்கவில்லை என்று தகவல் அறியும் கேள்விக்கு செயலகம் அனுப்பிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட இந்த உத்தியோகபூர்வ வருகைகள் தொடர்பாக ஏதேனும் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் எதுவும் இல்லை அல்லது திறைசேரி அல்லது வேறு எந்த நிறுவனமும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here