5 இலட்சம் ரன்கள்; இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை


கிரிக்கெட் உலகிலேயே முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் 5 இலட்சம் ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்து வரும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து இந்த சாதனையை நிகழ்த்தியது.

இரண்டு அணிகளிற்கிடையிலுமான 4வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கப்டன் ஜோ ரூட் ஒரு ரன் சேர்த்த போது இங்கிலாந்து அணி 1,022 டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 இலட்சம் ரன்களை குவித்த அணி என்ற பெருமையையும் சாதனையையும் பெற்றது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்க அணி தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா வென்று முன்னணியில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் சமன் செய்யமுடியும். அதேசமயம், இங்கிலாந்து அணி சமன் செய்தாலே தொடரை வென்றுவிடும். கடும் நெருக்கடியுடன் தென்னாபிரிக்கா ஆடி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலிய அணி 830 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 432,706 ரன்கள் சேர்த்துள்ளது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி 540 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 273,518 ரன்கள் சேர்த்துள்ளது. 4வது இடத்தில் மே.இ.தீவுகள் அணி 545 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 270,441 ரன்கள் சேர்த்துள்ளது.

அதுமட்டுல்லாமல் போர்ட் எலிசபெத் நகரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிவிளையாடியதன் மூலம் வெளிநாடுகளில் சென்று 500 போட்டிகள் விளையாடிய அணி எனும் பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here