அதிகரித்த ஆதன வரிக்கு எதிராக மூன்றாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

கரைச்சி பிரதேச சபையினரால் அதிகரித்த வீதத்தில் அறவிடப்படுகின்ற ஆதன வரிக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வர்த்தகரான கு.மகேந்திரன் என்பவரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் சென்று பார்வையிட்டுள்ளதோடு, உடல் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர். இதன் போதே அவரது உடல் வழமை போன்று இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையால் எந்தவொரு உள்ளுராட்சி சபையாலும் அறவிடப்படாத அளவுக்கு அதிகரித்த வீதமான பத்து வீத வரி அறவிடப்படுகிறது. இதனை நான்கு வீதமாக குறைக்குமாறு தெரிவித்தே கடந்த வியாழக்கிழமை காலை ஒன்பது மணி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவரை அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்வையிட்டும் வருகின்றனர்.

இதேவேளை தனது போராட்டம் தனி நபர் பேராட்டமாக இருந்தாலும் முழு மக்களுக்கான நன்மைக்குரியதே எனவே எனது போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், உள்ளிட்ட அனைவரையும் வழங்குவதோடு இ்நத அதிகரித்த ஆதனவரிக்கு தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பொது மக்கள் ஆதன வரியை செலுத்துவதனை தவிர்க்குமாறு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here