வவுனியாவில் தன்னியக்க இரத்த பரிசோதனைக் கருவி கண்டுபிடித்த மாணவி: உரிமைகோரி பாடசாலையுடன் மல்லுக்கட்டும் தனியார் நிறுவனம்!


வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரி இன்று (24) இரவு 8.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் இன்று இரவு 7.30 மணியளவில் தொலைபேசி மூலம் எனக்கு தொடர்பு கொண்டு உன்னை இல்லாமல் செய்வேன் , பாடசாலையிலிருந்து நீக்குவேன் போன்ற பல்வேறு விடயங்களை தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்தாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார். பாடசாலையின் அதிபரின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார் என செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த மாணவி தனது தனியார் கல்லூரியின் மாணவியெனவும் எமது கல்லூரியுடாகவே தொழிநுட்ப அறிவினை பெற்று இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார் என குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் தெரிவித்திருந்திருந்தார்.

இந் நிலையிலேயே வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here