அவுஸ்திலேிய ஓபன்: நடப்பு சம்பியனிற்கு அதிர்ச்சியளித்த 15 வயது வீராங்கணை!


மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் நடப்பு சம்பியனும் ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா 15 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே மகளிர் ஒற்றையர் 3வது சுற்றில் சீன வீராங்கனை கியாங் வாங் என்பவரிடம் செரீனா 6-4, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் இன்று நடப்பு சம்பியனின் கனவும் தகர்ந்தது.

மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதலாவதான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று 3வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. நடப்பு சம்பியன் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்த்து மோதினார் தரநிலையில் இடம் பெறாத 15வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்.

அவுஸ்திரேலியன் ஓபன் போட்டியில் முதல்முறையாக கோகோ காஃப் களமிறங்கினார். ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் வரை பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஒசாகாவை 6-3 , 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் கோகோ.

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சம்பியன் ஒருவர் 3வது சுற்றிலேயே 15வயது வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here