கிரானில் மண் வாகனம் மோதி உயிரிழந்தவரின் உடல் அடக்கம்: கறுப்பு பட்டியணிந்து மக்கள் போராட்டம்!

சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கக் கோரி இன்று (24) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கிரானில் கறுப்பு பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த புதன் கிழமையன்று (21) கிரான் கோராவெளி வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் மன் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினால் மோதுண்டு உயிரிழந்திருந்தார். இவரது சடலம் நல்லடக்கம் செய்ய வீதியால் கொண்டு சென்ற வேளை குறித்த உயிரிழப்பிற்கு காரணமான வாகன விபத்தினை கண்டித்தும், சட்ட விரோத மண் அகழ்வினை நிறுத்தக் கோரியும் பிரதேச விவசாய அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து கறுப்பு பட்டியணிந்து இவ் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதனால் மட்டக்களப்பு- கொழுப்பு வீதியில் வாகன நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டது.

“அருமையானவர்களை அழிக்காதே.” “இழந்தவற்றை பெற்று விட முடியாது” “விவசாயத்தை மண் தோண்டி புதைத்து விடாதே.””அள்ளுவது மண் அல்ல விவசாயிகளின் வாழ்க்கை.” “உயிர்கள் பெறுமதி மிக்கவை மன்னுக்காக அவர்களை கொல்லாதே” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியவாறு இறந்தவரின் உடலை சுமந்தாவாறு சென்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here