ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்படிவம் பெறுவதில் தள்ளுமுள்ளு; அலுவலக கண்ணாடிகளும் நொறுங்கின: சுமுகமாக்கிய பொலிசார் (PHOTOS)

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களை பெற சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் அமைதியின்மை ஏற்பட்டது.

இன்று (24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.

இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் இராணுவத்தினரின் வருகையை தொடர்ந்து சுமூக நிலையை அடைந்தது.

இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்டிவங்களை சீராக வழங்குவதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

அதிகளவானவர்கள் முண்டியடித்ததில் அலுவலக கண்ணாடிகள் சிலவும் உடைந்தன.

இன்று மாத்திரம் ஏறத்தாள 1500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் குறித்த விண்ணப்ப படிவங்களை நாவிதன்வெளி, அன்னமலை, சவளக்கடை, சொறிக்கல்முனை, சாளம்பைக்கேணி, மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பத்தாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here