பிரசவித்த குழந்தையை ஏற்க மறுக்கும் ஆண்: காதலி மிரட்சியில்!


கடந்த சில தினங்களின் முன்னர் ஆணொருவர் குழந்தை பிரசவித்த அதிர்ச்சி செய்தி வெளியாகியிருந்தது. மாத்தறையை சேர்ந்த ஒருவரே குழந்தையை பிரசவித்திருந்தார்.

அந்த குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது, தத்து கோருபவர்களிடம் குழந்தையை வழங்குங்கள் என அவர் வைத்தியசாலையில் கூறிவிட்டார். இதனால் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி அவர் குழந்தை பிரசவித்திருந்தார்.

அன்றையதினம் காற்சட்டை, ரீசேட் அணிந்தபடி, தாடி வைத்து, வைத்தியசாலைக்கு வந்த இளைஞன், வயிற்றுவலியென குறிப்பிட்டார். அவரை பரிசோதித்தபோது, அவர் குழந்தை பிரசவிக்கும் நிலையிலிருந்தது தெரிய வந்தது. உடனடியாக, பிரவச விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். தாடி, மீசையுடன் ஆணொருவர் பிரசவத்திற்கு வந்ததை கண்டு, பிரசவவிடுதியிருந்த பெண்கள் மிரண்டனர்.

அவர்களை சமரசப்படுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அவரை அனுமதித்து சிறிது நேரத்தில் குழந்தை பெற்றேடுத்தார்.

மாத்தறையை சேர்ந்த அவர், பெண்ணாக பிறந்து, பின்னர் தன்னை ஆணாக உணர்ந்து, தன்னை மாற்றிக் கொண்டவர். சிகிச்சையின் மூலம் மார்பகத்தை அகற்றியிருந்தார். பின்னர், ஆணாக மாறி, நீண்டகாலமாக மாத்தறையில் முச்சக்கரவண்டி ஓட்டுநராக செயற்பட்டு வருகிறார்.

அவருடைய ஓரினச்சேர்க்கை காதலர் மூலம் குழந்தை பிரசவித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.

எனினும், சிகிச்சையின் மூலம் அவர் மார்பகத்தை அகற்றியதால், குழந்தைக்கு பாலூட்ட முடியவில்லை. பின்னர், வைத்தியசாலையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் குழந்தை பராமரிக்கப்பட்டது.

தற்போதும் வைத்தியாலையில் தங்கியிருக்கும் முச்சக்கரவண்டி சாரதி, தற்போது குழந்தையை பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

இதேவேளை, குழந்தையை பிரசவித்தவரை பார்வையிட அவரது நண்பர்களென அதிகளவானவர்கள் வருகை தந்துள்ளனர். தற்போது, அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அவரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியாட்களை கட்டுப்படுத்த, ஒரு காவலர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தை பிரசவித்த வாலிபருக்கு காதலியொருவர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here