நாளை முதல் கண்டியில் ஏற்படும் மாற்றம்: பயணிகள் அவதானம்

கண்டி பிரதான நகரத்தில் புகையிரத நிலையம் குட்செட் பிரதேசத்தில் காணப்படும் தனியார் மற்றும் அரச பேருந்து பஸ் நிலையம் நாளை (25) முதல் திருத்த வேலை காரணமாக மூடப்படவுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்த பஸ் தரிப்படத்திற்கு பதிலாக போகம்பர விளையாட்டு திடல் பிரதேசம்¸ மத்திய சந்தை பிரதேசம்¸ கல்வி திணைக்கள பிரதேசம்¸ போன்ற இடங்களில் தற்காலிக தரிப்பிடங்கள் நிரூவபட்டுள்ளன.

கண்டி நகரத்திற்கு செல்லும் பயணிகள் இதனை கருத்திற் கொண்டு உரிய பஸ் நிலையங்களை தெரிந்துக் கொள்ளுங்கள் இது உங்களது பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

தற்போது மேற்படி பஸ் நிலையத்தில் காணப்பட்ட அனைத்து தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. கண்டி நகரில் ஏற்பட்டு இருக்கும் பஸ் தரிப்பிட வசதி இன்மையை நீக்குவதற்கும் பாரிய சனநெரிசலை குறைப்பதற்கும் பயணிகளின் பயனத்தை இலகுப்படுத்துவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here