சிம்பாவேயை வீழ்த்தியது இலங்கை!

சிம்பாவேயுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. கடைசி நாளான இன்று முழுவதும் தோல்வியை தவிர்க்க போராடி, 13 ஓவர்கள் இருக்கும் நிலையில் சிம்பாவே வீழ்ந்தது.

சிம்பாவே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் சிம்பாவே 358 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. எர்வின் 85 ஓட்டங்களை பெற்றார். எம்புல்தெனிய 114 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் விழுத்தினார்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 515 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அஞ்சலோ மத்யூஸ் முதலாவது இரட்டை சதமடித்தார். ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் சிம்பாவே 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ரன்கள் அடிப்பதை விட எப்படியாவது இன்றைய நாளை கழித்து விட்டால் போட்டியை சமன் செய்து விடலாம் என்ற நோக்கத்தில் சிம்பாவே வீரர்கள் விளையாடினர்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சராசரியாக 50 பந்துக்கு மேல் சந்தித்தனர். இறுதியாக விக்கெட் கீப்பர் சகப்வா 142 ரன்கள் பந்துகள் சந்தித்து கடைசி நபராக ஆட்டமிழந்தார். அப்போது ஆட்டம் முடிய 13 ஒவர்களே இருந்தது. ஆனால் 13 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்தது.

பின்னர் இலங்கை 3 ஓவரில் 14 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 92 ஓவர்கள் தாக்குப்பிடித்த சிம்பாவே, மேலும் 13 ஓவர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது.

ஆட்டநாயகன் இரட்டை சதமடித்த அஞ்சலோ மத்யூஸ்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here