திருமணத்தை விட சிறைவாசம் பரவாயில்லை: காதலியிடமிருந்து தப்ப திருடி சிறை சென்ற இளைஞன்!

சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருடி விட்டு ஒரு நபர் சிறை சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருமண செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடி வாலிபர் ஒருவர் சிறைக்குச் சென்று உள்ளார். சீனாவில் இது பலருக்கும் சிரிப்பை வரவழைத்த சம்பவமாக நடந்தேறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் ஜென்னிடம் அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்தக் காதலி விடுவதாக இல்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகில் இருந்த நடன ஸ்டூடியோவுக்கு சென்று அங்கிருந்த ஸ்பீக்கரை திருடியுள்ளார். திருட்டு புகாரில் உடனடியாக அவரைப் பொலிசார் கைது செய்தனர். மகிழ்ச்சியாக கைதான சென், காதலியிடம் இருந்த தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நிச்சயம் பொலிசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தெரியும் எனவும் சிரித்துக் கொண்டே அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவரது திட்டம் பலித்ததா, காதலி இவரைப் பிரிந்து சென்றாரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இது சமூகவலைத்தளவாசிகளை ஈர்க்க பலரும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here