தந்தை மது அருந்திவிட்டு வந்து சண்டையிடுவதால் யுவதி உயிரை மாய்த்தார்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மேபில்ட் சாமஸ்பிரில் யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதியின் தந்தை தினந்தோரும் மது அருந்திவிட்டு வந்து தனது மகளிடம் சண்டைப்பிடிப்பதாகவும், நேற்று இரவும் மதுபானம் அருந்திட்டு வந்து தனது மகளிடம் கடுமையான முறையில் சண்டைபிடித்து கொண்டதாகவும், எனது தந்தை மது மருந்தி விட்டு வந்து மோசமான முறையில் சண்டை பிடித்ததன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன் கைப்பட எழுத்திய கடிதத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ராஜதுரை நவலெட்சுமி (24) என்ற யுவதியே உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகள் திடீர் மரண விசாரணையாளர் தலைமையில் இடம்பெற்றவுடன் யுவதியின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபடுமென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here