கசந்தது 3 வருட திருமண பந்தம்… பல்கலைகழக மாணவியை கொன்றது கணவன்: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் இன்று மதியம் பல்கலைகழக மாணவியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீட மாணவியான பேருவளையை சேர்ந்த ரோஷினி காஞ்சனா (29) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

அவரை கொன்ற இராணுவச்சிப்பாய், அவரது காதலியென முன்னர் செய்தி வெளியான போதிலும், கொல்லப்பட்டவரின் கணவனே அந்த சிப்பாயாவார்.

அவரது கணவனாகிய களுத்துறையை சேர்ந்த எரங்க திலீப்குமார (30) என்பவர், கொலை செய்து விட்டு தப்பியோடிய போது மடக்கிப்பிடிக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவர் பரந்தனில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றுகிறார். கொலையை செய்து விட்டு, சாகவாசமாக நடந்து சென்று, அங்குள்ள குடிநீர் குழாயில் முகத்தை கழுவிவிட்டு அவர் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கொலையாளி

இருவருக்கும் திருமணமாகி 3 வருடங்களாகிறது. அண்மைக்காலமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சன கொலையில் முடிந்துள்ளதாக தெரிகிறது.

யாழ் பண்ணை கடற்கரையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவி

யாழ் பண்ணை கடற்கரையில் காதலனான இராணுவச் சிப்பாயால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவி- திகிலூட்டும் வீடியோ

Slået op af Page tamil i Onsdag den 22. januar 2020

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here