குடு அலைவரிசையே பொய் பிரச்சாரம்… மஹிந்த, அமைச்சர்களின் மனைவியர்களது குரல் பதிவு உள்ளது: ரஞ்சனின் அதிரடியால் ஆளுந்தரப்பு கலக்கத்தில்!

மஹிந்த ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல் என்னுடமுள்ளது. இன்றுள்ள அமைச்சர்கள் பலரது மனைவியரது தொலைபேசி உரையாடல்களும் உள்ளன என ஆளுந்தரப்பின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.

இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியபோது இந்த புதிய தகவல்களை அம்பலப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் ஆணைக்குழு அமைக்கப் போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். தலை வணங்குகிறேன். ஆணைக்குழு அமையுங்கள். இதுவரை வெளியாகாத பல ஆவணங்களுடன் அங்கு வருகிறேன். அதில், மஹிந்த ராஜபக்சவின் குரல் பதிவும் உள்ளது அவரது ஆறு, ஏழு குரல் பதிவுகள் உள்ளன. அவர் ஆட்சியாளராக இருந்தபோது பேசியவை.

வன் சொட் படப்பிடிப்பில் இருந்தபோது, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மஹிந்த, ரஞ்சன் இன்று நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் என்றால், அதற்கு நான்தான் காரணமென்றார்.

எனது வன்சொட் படத்தை பார்க்க விரும்பினார்கள். சில அமைச்சர்களும் படத்தை பார்க்க வந்தனர். படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்தபோதுதான், அன்று லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனது தொலைபேசி உரையாடல்களை நான் வெளியிடவில்லை. அதை எனது பாதுகாப்பிற்காகவே வைத்திருந்தேன். அதை குடு அலைவரிசையே வெளியிட்டது.

என்னை இன்று அமைச்சர்கள் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களின் மனைவியருடைய குரல் பதிவும் என்னிடமுள்ளது. அண்ணா இங்கு வாருங்கள். இவர்களிற்கு புரிய வையுங்கள் என அவர்கள் அழைத்தனர். பிரதமராகும் கனவில் இருந்த அமைச்சர், இரண்டாவது திருமணம் செய்தால் அதை அடையலாமென யாரோ சொன்னதை நம்பியிருந்தார். அவையெல்லாம் என்னிடமுள்ளது.

இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் மணல் அகழ்வு அனுமதியை 75 பேரும், மதுபானசாலை அனுமதியை 100 பேரும், எதனோல் கொண்டு வருபவர்கள் 4 பேரும், குடு கொண்டு வருபவர்கள் 2 பேரும் உள்ளனர்.

ஷாருக்கானிற்கு குண்டுத் தாக்குதல் நடத்தியது யார்?. உதய கம்மன்பிலவிற்கு  தெரியும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here