உலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா?

19 வயதுக்குட்பட்டவர்களற்கான உலகக் கோப்பை போட்டியில் ஆடி வரும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அவர் மணிக்கு 175 கிமீ வேகத்தில் பந்தை வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் இந்த வேகத்தில் பந்தை வீசியது உண்மையாக இருந்தால், கிரிக்கெட் உலகின் அதிவேக பந்து வீச்சாளராக மதிஷ பத்திரன விளங்குவார்.

பாகிஸ்தானின் சொகைப் அக்தர் உலகின் அதிவேக பந்து வீச்சாளராக விளங்கினார். அவர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.

இருப்பினும், மதிஷ் பந்துவீச்சின் வேகம் குறித்து ஐ.சி.சி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஸ்பீடோமீட்டரில் ஏற்பட்ட பிழை காரணமாக தொலைக்காட்சி நேரலையில் அப்படி குறிப்பிடப்பட்டதா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ஆட்டத்தில் இந்தியா 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாயணச்சுழற்சியில் வென்ற இந்தியா 297 ஓட்டங்களை பெற்றது. இலக்கை விரட்டிய இலங்கை 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here