சாரதி இலேசாக கண்ணயர்ந்தாராம்: யாழிலிருந்து சென்ற கூலருக்கு நேர்ந்த கதி! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கழிவு மீன்களை ஏற்றி வந்த கூலர் வாகனம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை மன்னார் பிரதான பாலத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (20) இரவு மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி குறித்த கூலர் வாகனம் பயணித்துள்ளது.

குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த மீன் கழிவுகள் கோழித்தீன் தாயரிப்பதற்காக மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகின்றது.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தினுடாக பயணித்த கூலர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 5 தடைகளை உடைத்து வீதியை விட்டு பாய்ந்து மீண்டும் வந்த திசையை நோக்கி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூலர் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here