யாழில் குடும்பமே தற்கொலை முயற்சி: மாமியார் உயிரிழப்பு; இளம் தம்பதி ஆபத்தான நிலையில்!

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது. இதில் மாமியார் உயிரிழந்த நிலையில், இளம் தம்பதியான கணவன், மனைவி இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுவில், சந்திரபுரம் வடக்கில் இன்று (20) இரவு இந்த சம்பவம் நடந்தது.

கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவரத்தினம் விமலேஸ்வரி (64) என்பவர் உயிரிழந்துள்ளார்.

சிவபாலன் சிவலக்சன் (35), சிவலக்சன் கீர்த்திகா (35) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here