இந்த வருடத்தின் முதலாவது சலஞ்ச்… ட்ரெண்டாகும் #cerealchallenge

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகுவதும், அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சலஞ்ச், கரப்பான்பூச்சி சலஞ்ச், ஐஸ் சலஞ்ச் , மோமோ சலஞ்ச், ப்ளூ வேல் சலஞ்ச், ஐஸ் பக்கெட் சலஞ்ச், ரென் இயர்ஸ் போட்டோ சலஞ்ச், வீடியோ கோல் சலஞ்ச் போன்றவைகள் வைரலாகின.

பலரும் அந்த சலஞ்சை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது ‘தானிய சலஞ்ச்’ என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வருடத்தின் முதல் சவாலாக டிக் டொக் செயலியில் வைரலாகி வருகின்றது தானிய சலஞ்ச் (cereal challenge). காலை உணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இது தான் #cerealchallenge. பாலை அதிகம் வாயில் ஊற்றிவிட்டு சிரிக்கும் போது கான்பிளக்ஸை வாயில் போட்டு இந்த சவாலை எதிர்கொள்கின்றனர் சிலர்.

எது எப்படியோ விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி என சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here