சாய்ந்தமருது வைத்தியசாலை ஊழியர்கள் பாராட்டு விழாவும் பெண்கள் விடுதி கையளிப்பும்!

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியில் பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பீ.எல்.சி நிறுவனத்தின் அல் – ஸபா இஸ்லாமிய நிதிப் பிரிவு கல்முனை கிளை ஊடாக அந்நிறுவனத்தின் சமூக கூட்ட பொறுப்புடமை ( Corporate Social Responsibility – CSR Project ) நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பெண்கள் விடுதி கையளிப்பு நிகழ்வும் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தகர்கள் பாராட்டு நிகழ்வும் இன்று (19) மாலை அபிவிருத்தி குழு பிரதி தலைவர் வைத்தியர் சனூஸ் காரியப்பர் அவர்களின் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ .சுகுணன் கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பீ.எல்.சி நிறுவனத்தின் அல் ஸபா இஸ்லாமிய நிதிப் பிரிவு, கல்முனை பிராந்திய கிளை முகாமையாளர் எம்.ஐ.எம்.பைஸால் அவர்களும் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை மாவட்ட ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத், காரைதீவு பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர். திருமதி ஜே.சிவசுப்ரமணியம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வைத்திய துறை அதிகாரிகள், பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பி.எல்.சி நிறுவன அல் – ஸபா இஸ்லாமிய நிதிப் பிரிவு கல்முனை கிளை உயர் அதிகாரிகள். வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வைத்தியதுறைக்கு தம்மை அர்ப்பணித்த உத்தியோகத்தர்கள், உழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here