மாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்!

மாணவர் ஒருவரை பாடசாலையில் இணைத்துக் கொள்ள இலஞ்சம் வாங்கிய போது, கைதான அதிபரை இந்த மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டது.

ஹிந்தகல செவாலி மகா வித்யாலயாவின் அதிபர், மாணவர் ஒருவரின் பெற்றோரிடம் 50,000 ரூபா இலஞ்சம் வாங்கியபோது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று முன்தினம் (14) மதியம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரை நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவரை பாடசாலையில் இணைக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட தொகை இலஞ்சப் பணம் செலுத்த வேண்டுமென பாடசாலை அதிபரினால், மாணவனின் பெற்றோரிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் மாணவனின் தாயாரும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பெண் அதிகாரியொருவரும் பாடசாலைக்கு சென்று, இலஞ்சப் பணத்தை செலுத்தினார்கள்.

அதிபர் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here