குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக நியமித்துள்ள எம்.பிக்கள்: விபரம் முதலமைச்சர் வேட்பாளர்களே முன்னிலை!

வடக்கு கிழக்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளணியினருக்கான இரண்டு நாள் செயலமர்வு நேற்றும், நேற்று முன்தினமும் நடந்து முடிந்துள்ளது. காங்கேசன்துறையிலுள்ள தல்வென விடுதியில் இந்த செயலமர்வுகள் நடந்தன.

வாகன சாரதிகள், செயலாளர்கள், தட்டச்சாளர்கள், இணைப்பாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய பிரத்தியேக ஆளணியினருக்கான இரண்டு நாள் செயலமர்வே நடந்து முடிந்தது. நிதி ஒதுக்கீடுகளை எப்படி வினைத்திறனாக பயன்படுத்துவது, அடையாளம் காண வேண்டிய முன்னுரிமையான பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த செயலமர்வின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரை தமது தனிப்பட்ட ஆளணியில் நியமித்துள்ளனர் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட எம்.பிக்கள் தொடர்பான விபரத்தின் ஒரு பகுதியை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. முழுமையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இன்னும் கிடைக்காத நிலையில், கிடைத்த பட்டியலில் உள்ளடங்கிய பெயர் விபரங்களின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈ.பி.டி.பியின் ஒரு நாடாளுமன்ற தமது உறவினர்களை இந்த பணியில் நியமித்துள்ளது வெளிப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தயாராகிக் கொண்டிருக்கும் இருவர் இதில் உள்ளடக்கம்.

தமிழரசுக்கட்சியின் எம்.பி மாவை சேனாதிராசாவே இந்த விவகாரத்திலும் முன்னணியில் இருக்கிறார்.

அவரது மகன் கலையமுதனையும், மாவையின் சகோதரரின் மகளையும் இந்த பட்டியலில் வைத்துள்ளார். அத்துடன், தனக்கு நெருக்கமான, வலி.வடக்கின் தவிசாளர் சோ.சுகிர்தனும் இந்த பட்டியலில் உள்ளனர்.

கிளிநொச்சி எம்.பி சிறீதரன் தனது மனைவியையும், மனைவியின்நெருங்கிய உறவினரையும் இந்த பட்டியலில் வைத்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது சகோதரர் தயானந்தாவை இந்த பட்டியலில் வைத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here