மன்னாரில் இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தர் டெங்கிற்கு பலி!


மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இன்னுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (13) உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்ற அநுராதபுரம், தளாவப் பகுதியை சேர்ந்த எஸ்.ரத்னாயக்க (28) என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னர், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மதவாச்சி – ஹெத்தாகடஹெட்ட, வீரகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.சீ.பியரத்தின (45) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (12) உயிரிழந்தார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here