அரச அலுவலகத்தின் கழிப்பறையில் பெண்களை இரகசியமாக படம் பிடித்தவர் சிக்கினார்!


பதுளையிலுள்ள அரச நிறுவனமொன்றின் பொது கழிப்பறையில் பெண்களை இரகசியமாக வீடியோ படம் பிடித்த சந்தேகத்தின் பேரில் அந்த அலுவலகத்தின் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) அலுவலகத்தில் வைத்து அவரை பதுளை பொலிசார் கைது செய்தனர்.

சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியில் அலுவலகத்தில் உள்ள பெண்களின் வீடியோ காட்சிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் வாளியில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

கழிப்பறையின் ஒரு பெண் ஊழியர் இதைக் கண்டு அலுவலகத்தின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

40 வயதான ஒருவரே கைதாகியுள்ளார். அவர் தனது முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here