அனுமதி இன்றி 96 இலட்சம் ரூபா செலவு: பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு


கரைச்சி பிரதேச சபையில் கடந்த ஆண்டு மாத்திரம் 96 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி சபையின் அனுமதியின்றி எவ்வித சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது செலவு செய்யப்பட்ட பின்னர் நிதி விடுவிப்புக்கு சபையின் அனுமதிக்கு கொண்டுவரப்படுகிறது என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

சபை நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு திட்டத்திற்கு செலவு செய்யப்படுகின்ற போது நிதிக் குழுவில் அனுமதிக்கு விடப்பட்டு அங்கு அனுமதி பெற்று பின்னர் சபையின் அனுமதிக்கு விடப்படல் வேண்டும் ஆனால் கரைச்சி பிரதேச சபையில் அவ்வாறு எதுவும் இடம்பெறுவது கிடையாது தன்னிச்சையாக சபையின் நடைமுறைகளுக்கு புறம்பாக செலவு செய்து விட்டு இறுதியில் நிதிவிடுவிப்புக்கு சபையின் அனுமதி கோருகின்றனர். இதன் போது நாங்கள் நாங்கள் 11 உறுப்பினர்கள் மற்றும் ஏனைய எதிர்தரப்பு உறுப்பினர்களும் எதிர்தாலும் பெரும்பான்மையுடன் அவர்கள் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு செல்கின்றார்கள்.

இ்வ்வாறு பல்வேறு முறைக்கே்டுகள் கரைச்சி பிரதேச சபையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. எனவே இது தொடர்பில் நாம் கணக்காய்வு அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியிருகின்றோம்.இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளோம் எனவும் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here