மலையக மக்களின் உரிமைகளிற்காக சுதந்திர தினத்தில் போராட்டம்!

சுதந்திர இலங்கையில் மலையக மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் சுதந்திரதினத்திலன்று பெரும் எதிர்ப்பு போராட்டத்தில் கொழும்பில் முன்னெடுக்க தோட்டத் தொழிலாளர்கள் மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எங்கே சுதந்திரம் எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த அபேகோன் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கான காணி வசதியில்லை. அத்துடன் அவர்களுக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில் அவர்கள் பெரிய அசௌகரியத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் தேசிய வருமானத்தில் பெரும் பங்களிப்பைச் செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும்கூட லயன் குடியிருப்புகளிலேயே வசித்து வருகின்றனர். அதேபோன்று 2015ஆம் ஆண்டு அவர்களுடைய சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தீர்வைப் பெற்றுத் தரவில்லை. ஆகவே இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியே பெப்ரவரி 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினை கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். இந்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொள்ள உள்ளனர் என்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here