தொழிலதிபருக்கு 3ம் தாரமாகியது குற்றமா?: குமுறும் இளம் நடிகை!


தமிழில் மவுனம் பேசியதே, இனிது இனிது காதல் இனிது ஆகிய படங்களில் நடித்தவர் நேகா பென்ட்ஸ். இந்தியில் பியார் கோய் கொல் நஹின் படம் மூலம் அறிமுகமாகி தேவதாஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நேகா பென்ட்சுக்கும் மும்பை தொழில் அதிபர் ஷருதுல் பயாசுக்கும் திருமணம் நடந்துள்ளது. நேகாவை மணந்துள்ள ஷருதுல் பயாசுக்கு இது 3வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். அவருக்கு 3ம் தாரமாக நேகா மனைவியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளத்தில் பலரும் இந்த திருமணத்தை கேலி செய்து கருத்து பதிவிடுகிறார்கள். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. விமர்சித்தவர்களுக்கு பதில் அளித்து நேகா பென்ட்ஸ் கூறியதாவது:-

“இன்றைய சமூகத்தில் ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் சாதாரண விஷயமாகி விட்டது. வாழ்க்கையில் சொந்த முடிவுகளை அவரவர் எடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. உலகில் யாருமே 3ம் திருமணம் செய்து கொள்ளவில்லையா? நான் மட்டும்தான் 3வது திருமணம் செய்து கொண்டேனா? பெரிய குற்றம் செய்ததுபோல் என்னை விமர்சிப்பது சரியல்ல.”

இவ்வாறு நேகா பென்ட்ஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here