கேரளா போலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை சந்தேகநபர்களின் மாறுவேட படம்!


சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் தொடர்புடைய சந்தேகநபர்களின் மாறுவேட படங்களை கேரள போலீஸ் வெளியிட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த 8-ந்தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களான அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீம் மற்றும் தவுபீக்கின் மாறுவேட படங்களை கேரள போலீஸ் வெளியிட்டது. மேலும் மாறுவேட மாதிரி தோற்றத்தில் தெரிந்தால், அவர்களை பற்றி தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here