2019இல் தலவாக்கலை பொலிசார் விதித்த போக்குவரத்து அபராதத் தொகை எவ்வளவு தெரியுமா?


தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2019ம் ஆண்டில் போக்குவரத்து குற்றங்களிற்காக விதிக்கப்பட்ட அபராதம் 57 இலட்சம் ரூபாவாகும்.

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

தலவாக்கலை, லிந்துலை, வட்டகொட பகுதிகள் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளாகும். இந்த பகுதிகளில் குடிபோதையில் வாகனம் செலுத்தல், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களிற்காக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 57 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here