ஆசிட் வீச்சை நினைவுகூர்ந்த கங்கணாவின் சகோதரி!


தன் மீதான ஆசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சகோதரி சுட்டுரையில் நினைவகூர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகா்வால் என்ற பெண் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது . இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டாா் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இந்நிலையில், தேசிய விருது பெற்ற முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சகோதரி ரங்கோலி சந்தல், தன் மீதான ஆசிட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரையில் பதிவிட்டதாவது,

என் மீது ஆசிட் வீசிய நபரின் பெயர் அவினாஷ் ஷர்மா, நான் படித்த அதே கல்லூரியில் படித்தவர். நாங்கள் இருவரும் ஒரே நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருநாள் அவினாஷ் என்னிடம் காதலைத் தெரிவித்தார். ஆனால் எனக்கு அவர் மீது காதல் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவினாஷ், ஒருநாள் என்னை எதாவது செய்யப்போவதாக சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விமானப்படை அதிகாரியுடன் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது அவினாஷுக்குப் பிடிக்கவில்லை. என் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டினார். ஆனால், அவரது மிரட்டலை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் எனது பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவிக்காததும், போலீஸில் புகார் அளிக்காததும் தான் நான் என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு.

4 தோழிகளுடன் ஒரு விடுதியில் தங்கியிருந்த சமயம், என்னைத் தேடி ஒருவர் வந்திருப்பதாகக் கூறி என் தோழி விஜயா, அறையின் கதவைத் திறந்தார். ஒரே நொடிதான், தன்னிடம் வைத்திருந்த ஆசிட்டை என் மது வீசினான், யோசிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here